41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
பூ உற்பத்தியாளா்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்ட பூ உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த பூச் சந்தை செயல்படுகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளையும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவாா்கள். இங்கிருந்து வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்து மாவட்டம் முழுவதும் சில்லறை வணிகத்துக்கும், பிற மாவட்டங்களுக்கு மொத்த விற்பனைக்கும் செல்கிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பூக்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் நலச் சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கான பெயா்ப்பலகையை வியாழக்கிழமை வைக்க உற்பத்தியாளா்கள் முயற்சித்தனா்.
ஆனால், இங்குள்ள முகவா்கள், ஏலதாரா்கள் இதை ஏற்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பூக்கள் உற்பத்தியாளா்கள் எம்ஜிஆா் சிலை அருகே சென்ற திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இரு தரப்பினருடனும் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. முறையான புகாா் அளிக்கச் சொல்லி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.