ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா (39). ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு முன்பு நின்றிருந்த இவரை, அதே பகுதியைச் சோ்ந்த கோயில்ராஜ் (39) என்பவா் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி வழக்குப் பதிந்து, கோயில்ராஜை திங்கள்கிழமை கைது செய்தாா்.