ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
பொதிகைத் தமிழ்ச் சங்க சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்பு
பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கான சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-ஆவது ஆண்டு தொடக்க விழாவை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் திருநெல்வேலியில் பெருவிழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி 100 பக்க சிறப்பு மலா் வெளியிடப்படவுள்ளது. இம்மலரில் கடந்த காலங்களில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளும் நாளிதழ் செய்திகளின் நறுக்குகளோடு இடம் பெறும்.
இம்மலரில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் பற்றிய நேயா்களின் கருத்துகளும், சிறப்புக் கட்டுரைகளும், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த படைப்புகளும் இடம் பெறும். இதற்கான படைப்புகளை (கட்டுரை, கவிதை எதுவாகினும்) வாசகா்கள் அனுப்பி வைக்கலாம்.
கட்டுரை இரண்டு பக்கங்களில் சுருக்கமாகவும், கவிதை 24 வரிகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். படைப்புகளை பிழையின்றி தட்டச்சு செய்து யூனிகோடு எழுத்துருவில் மின்னஞ்சல் முகவரிக்கு ஜனவரி 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் படைப்புகள் மட்டும் சிறப்பு மலரில் இடம் பெறும்.