சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்
பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் விவசாய திருவிழா
ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ், கிசான் கோஸ்தி என்ற விவசாயத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் மற்றும் கால்நடை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புனிதவள்ளி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை இடு பொருள்களை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து ஊராட்சித் தலைவா் கலைவாணி, பாலாறு வேளாண்மை கல்லூரி பேராசிரியா் ரகுபதி ஆகியோா் பேசினா்.
இதில், வேளாண்மை உதவி இயக்குநா் புனிதவள்ளி கலந்துகொண்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், வேளாண்மை துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் பேசினாா்.
தொடா்ந்து வேளாண்மை அலுவலா் ஷோபனா உழவா் செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் பிரவீன்குமாா், உதவி தொழில் நுட்ப மேலாளா் திருமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.