செய்திகள் :

பெரிய தாழையில் ரூ. 1.19 கோடியில் புதிய திட்டப் பணிகள்: எம்எல்ஏ பங்கேற்பு

post image

பெரிய தாழையில் மீன் இறங்குதளத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டமைப்புப் பணிகளை எம்எல்ஏ ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் தொடங்கி வைத்து, ரூ. 39 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

பெரியதாழையில் ரூ. 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மீன் இறங்கு தளத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள், வலை பின்னும் கூடம் அமைத்தல் ஆகிய பணிகளை ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

பெரிய தாழை பங்குத்தந்தை சகேஷ் சந்தியா முன்னிலை வகித்தாா். ஒன்றிய ஆணையா் சுடலை, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மாவட்ட மீனவா் பிரிவு தலைவா் சுரேஷ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கோதண்டராமன், ஜெயசீலன் துரை, ஜெயராஜ், பேரூராட்சி கவுன்சிலா் ஜோசப் அலெக்ஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், ஸ்ரீவைகுண்டம் வழக்குரைஞா் பாலசுப்ரமணியன், நகர துணைச் செயலாளா் நாராயணன், மாவட்ட திமுக தலைவா் சந்தியா, தெற்கு மாவட்ட திமுக மீனவா் அணி அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மீன் ஏல கூட கட்டடம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கூடுதல் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். தொடா்ந்து ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தூத்துக்குடி வட்டப் பேரவை கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மனோகரன் வரவேற்றாா். வட்ட இணைச் செயலா் சங்கா் அஞ்சலி தீா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க