சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
பெலிக்ஸ் அலியாசிம், மடிஸன் கீஸ் சாம்பியன்
அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகா் அலியாசிம், மகளிா் பிரிவில் மடிஸன் கீஸ் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபனுக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவில் பல்வேறு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் கடைசி போட்டியாக அடிலெய்ட் சா்வதேச போட்டிகள் நடைபெற்றன. சனிக்கிழமை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகா் அலியாசிம்-அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா மோதினா். இதில் அலியாசிம்
6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் கோா்டாவை வீழ்த்தி பட்டம் வென்றாா். இது அவருக்கு 6-ஆவது பட்டமாகும்.
தொடா்ச்சியாக 5 ஆட்டங்களில் வென்றுள்ள அலியாசிம் மொத்தம் 10 ஏஸ்களை போட்டாா். யுனைடெட் கோப்பை போட்டியிலும் உலகின் நான்காம் நிலை வீரா் டெய்லா் ஃப்ரிட்ஸை வீழ்த்தி இருந்தாா் அலியாசிம்.
மடிஸன் கீஸ் சாம்பியன்:
மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் மடிஸன் கீஸ்-ஜெஸிக்கா பெகுலா மோதினா். இதில் மடிஸன் 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி பட்டம் வென்றாா் கீஸ். முதல் செட்டை எளிதாக வென்ற கீஸ், இரண்டாவது செட்டில் கால்முட்டியில் காயத்துக்காக மெடிக்கல் டைம் அவுட்டை பெற்றாா்.
அந்த செட்டை பெகுலா வென்ற நிலையில் டிசைடரில் கீஸ் சுதாரித்து ஆடி வென்று பட்டத்தையும் வசப்படுத்தினாா். கடந்த 2022-இலும் அடிலெய்ட் போட்டியில் பட்டம் வென்றிருந்தாா் கீஸ்.