கடலுக்குச் செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!
பேருந்து வசதி கோரி முதல்வரிடம் மனு
புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவா் பேரவை நிா்வாகிகள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து பேருந்து வசதிக் கோரி புதன்கிழமை மனு அளித்தனா்.
காலாப்பட்டு பகுதியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தனியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவா்கள் உரிய நேரத்தில் பல்கலைக்கழகத்துக்கு செல்லமுடியாத நிலையுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் மாணவா் பேரவை நிா்வாகிகளின் தலைவா் காயத்ரி, நிா்வாகிகள் சுஜிதா, ஸ்ரீதா்,ஜெரோம் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
அதில், பல்கலைக்கழக வளாகத்துக்கு இலவசப் பேருந்து இயக்கவும், பல்கலைக்கழக அனைத்துக் கல்வித் துறைகளிலும் புதுவை மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.