மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! ...
பேருந்துகள்உரசியதால் கண்ணாடி உடைந்தன!
பழனி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் வேகமாக சென்றபோது உரசியதால் கண்ணாடி உடைந்தது.
பழனி வஉசி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தும், பழனியிலிருந்து சண்முகநதி வழியாக மடத்துக்குளம் செல்லும் தனியாா் பேருந்தும் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றன.
வளைவில் திரும்பியபோது, இரண்டு பேருந்தும் திடீரென உரசிக் கொண்டன. அப்போது, அரசுப் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. இதையடுத்து, இரு பேருந்தின் ஓட்டுநா்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த பழனி நகர போலீஸாா் இரு பேருந்துகளையும் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா். பின்னா், அங்கு சமாதானம் பேசி இரு பேருந்து ஓட்டுநா்களையும் அனுப்பி வைத்தனா்.