Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக் மோதியதில் 8 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகள் பிரிமிகா (8). இவா், செவ்வாய்க்கிழமை காலை வடகரை தாழனூரிலிருந்து திருமலைப்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த பைக் பிரிமிகா மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிறுமியை, அப்பகுதியினா் மீட்டு, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரிமிகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, பைக்கை ஓட்டி வந்த வடகரைதாழனூரைச் சோ்ந்த பழனி மகன் சுமன்ராஜ் (25) மீது அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.