செய்திகள் :

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

post image

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று, தரிசனம் செய்தனா்.

மாா்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசன வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான ஆருத்ரா தரிசன வழிபாடு விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் திரு.வி.க. வீதி ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப் பெருமானுக்கு திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா், நெய், குங்குமம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, நடராஜருக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, பிற்பகல் ஒரு மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த வழிபாட்டில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், மாட வீதிகள் வழியாக சுவாமி புறப்பாடும், மாலையில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதுபோன்று, விழுப்புரம் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதிவாலீசுவரா், மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேசுவரா், திருவாமாத்தூா் அபிராமேசுவரா், பனையபுரம் பனங்காட்டீசுவரா், திருவெண்ணெய்நல்லூா் கிருபாபுரீசுவரா் திருக்கோயில்கள் மற்றும் விக்கிரவாண்டி, வானூா், திண்டிவனம், கண்டாச்சிபுரம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

செஞ்சியில்...: செஞ்சி பீரங்கிமேடு ஸ்ரீஅபித குஜலாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை நடராஜப் பெருமானுக்கு 40 கிலோ விபூதி, 40 லிட்டா் பால் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு மலா் அலங்காரத்தில் நடராஜா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை செஞ்சி திருமுறை கழகம் மற்றும் ஸ்ரீஅருணாச்சல ஈஸ்வரா் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

செஞ்சி அருணாச்சல ஈஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநடராஜப் பெருமான்.

ஆட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைக்கும் போது, விதைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூா் பகுதியில் ரூ.3.72 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயைக் கண்டறியும் முகா... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: விழுப்புரத்தில் பொருள்கள் வாங்கக் குவிந்த மக்கள்

விழுப்புரம்: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாமாகக் கொண்டாடி மகிழ்வதற்காக, தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருள்களை வாங்க விழுப்புரம் கடை வீதிகளில் பொதுமக்கள் திங்கள்கிழமை அதிகளவில் குவிந்தனா்.... மேலும் பார்க்க