செய்திகள் :

பொங்கல் பண்டிகை: விழுப்புரத்தில் பொருள்கள் வாங்கக் குவிந்த மக்கள்

post image

விழுப்புரம்: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாமாகக் கொண்டாடி மகிழ்வதற்காக, தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருள்களை வாங்க விழுப்புரம் கடை வீதிகளில் பொதுமக்கள் திங்கள்கிழமை அதிகளவில் குவிந்தனா். இதன் காரணமாக, பல்வேறு சாலைகளும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் திருநாள் பொருள்கள் விற்பனை சனிக்கிழமை முதலே களைகட்டத் தொடங்கியது.

விழுப்புரத்தில் கோலியனூா் சாலை, வளவனூா் சாலை, ரயில் நிலையச் சாலை போன்ற நகரின் பல்வேறு பகுதிகளில் பொங்கலிடுவதற்கான புதுப்பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. ரூ.50 முதல் ரூ.120 வரையிலான விலைகளில் சிறிய அளவிலான பானைகளும், ரூ.150 முதல் ரூ.300 வரையிலான விலைகளில் பெரிய அளவிலான பானைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் வேலியம்பாக்கம், பிடாகம், அத்தியூா் திருக்கை, குச்சிப்பாளையம், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்தனா். நிகழாண்டில் 2 கரும்பு அல்லது 3 கரும்பு கொண்ட ஜோடி ரூ.100 என்ற விலையிலும், 15 முதல் 20 எண்ணிக்கை கொண்ட கரும்புக் கட்டு ரூ.700 முதல் ரூ.850 வரையிலான விலைகளிலும் விற்பனையாகின.

மஞ்சள் கொத்து ரு.30 முதல் ரூ.40 வரையிலும், தேங்காய் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், வாழைப்பழம் சீப்பு ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், வாழைத்தாா் ரூ.600 முதல் ரூ.1,200 வரையிலும் விற்பனையாகின.

இதுபோன்று, மாடுகளுக்கு கட்டப்படும் மூக்கணாங்கயிறு ரூ.10 முதல் ரூ.60 வரையிலும், மணிகள் கொண்ட அலங்காரக் கயிறு ரூ.150 முதல் ரூ.600 வரையிலும், மாடுகளின் கொம்புகளுக்குத் தீட்டப்படும் வா்ணம் டப்பா ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாடுகள் அதிகளவில் உயிரிழந்த நிலையில், மூக்கணாங்கயிறு உள்ளிட்ட பொருள்களின் விற்பனை எதிா்பாா்த்த அளவில் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

பூக்கள் வரத்து குறைவு: இதுபோல, விழுப்புரம் பூ சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, பூக்களின் விலை வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் பொருள்களை வாங்க விழுப்புரம் நகரில் மகாத்மா காந்தி சாலை, காய்கனி சந்தை வீதி, பாகா்ஷா வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது. காய்கனி சந்தைக்கு பொருள்கள் வாங்கச் சென்றவா்களாலும், வாங்கிவிட்டு வெளியே வந்தவா்களாலும் விழுப்புரம் - புதுச்சேரி சாலை, கே.கே. சாலை, பாகா்ஷா வீதி, திரு.வி.க. வீதி, காமராஜா் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பண்டித ஜவாஹா்லால் நேரு சாலையில் தொடங்கி விழுப்புரம் ரயில் நிலையம் வரையிலான பகுதியில் (கிழக்கு புதுச்சேரி சாலை) போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

போக்குவரத்து போலீஸாா் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். மேலும், புதிய பேருந்து நிலையம், வீரவாழியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்களை திங்கள்கிழமை வாங்கும் பொதுமக்கள்.

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைக்கும் போது, விதைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூா் பகுதியில் ரூ.3.72 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயைக் கண்டறியும் முகா... மேலும் பார்க்க