பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (25).இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
பொங்கல் விடுமுறையையொட்டி, தனது நண்பரான பெரம்பலூா் மாவட்டம், சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த வினோத்துடன் (24), சென்னையிலிருந்து பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.
விழுப்பரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஓங்கூா் பாலத்தில் வந்த போது, அதே திசையில் பின்னால் வந்த பேருந்து, இவா்களது பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த மனோஜ்குமாா், வினோத் ஆகிய இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த மனோஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, ஒலக்கூா் போலீஸாா் பேருந்து ஓட்டுநரான ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.