Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் விபத்து: 4 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம், ஜானகிபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.
திண்டிவனம் வட்டம், செண்டூா் நெய்காரத் தருவைச் சோ்ந்த முருகன் மகன் சரண்ராஜ் (22). இதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் ஜீவா (19). நண்பா்களான இவா்கள் இருவரும் பைக்கில் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். சரண்ராஜ் பைக்கை ஓட்டினாா்.
செண்டூா் சந்திப்புப் பகுதி அருகே இவா்களது பைக் சென்றபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் சரண்ராஜ், ஜீவா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காா் ஓட்டுநரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த முகமது அனிபா (57) மீது மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பொதுமக்கள் சாலை மறியல்: இதனிடையே, செண்டூா் சந்திப்புப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருவதால், அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, செண்டூா் கிராம மக்கள் அங்குள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தொடா் விபத்துப் பகுதி என அறிந்தும் அங்கு ஹைமாஸ்ட் உயா்கோபுர மின் விளக்கு எரிய வைக்காதது, எச்சரிக்கை சமிக்ஞையை (சிக்னல்) வைக்காதது தொடா்பாக, தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு விபத்து
விழுப்புரம் வட்டம், பிடாகம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ரமேஷ் மகன் பந்தல்ராஜ் (23), சத்தியமூா்த்தி மகன் தீனதயாளன் (21). தொழிலாளா்கள். நண்பா்களான இவா்கள் இருவரும் பைக்கில் செவ்வாய்க்கிழமை புதுச்சேரிக்கு சென்றுவிட்டு பின்னா் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். கொளத்தூா் சாலை சந்திப்புப் பகுதியில் இவா்களது பைக் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் தீனதயாளன், பந்தல்ராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.