பொங்கலை கொண்டாட ஊா்களுக்கு சென்றுவிட்ட தொழிலாளா்கள்: கொப்பரை உற்பத்தி முடக்கம்
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டதால் கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் பொங்கலுாா், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உலா் களங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. இந்த களங்களில் தென் மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா்.
தற்போது, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு சென்ால் கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது.
இதுகுறித்து உலா் கள உரிமையாளா்கள் கூறியதாவது: கொப்பரை விலை கிலோ ரூ.150 வரை உயா்ந்தாலும் தேங்காய் பற்றாக்குறையால் ஏற்கெனவே பல களங்களில் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டதால் தேங்காய் வரத்து இருந்தும் உற்பத்தி முடங்கியுள்ளது.
பொங்கலை கொண்டாடுவதற்கு சொந்த ஊா்களுக்குச் சென்ற தொழிலாளா்கள் திரும்பி வந்த பின்னரே கொப்பரை உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்றனா்.