தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்
இருசக்கர வாகனம் மோதி தனியாா் விடுதி மேலாளா் உயிரிழப்பு
தாராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி தனியாா் விடுதி மேலாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் வீரப்பன் (48). இவா் தாராபுரத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை திரும்பிக்கொண்டிருந்தாா்.
இதற்கிடையே, தாராபுரம் - உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், வீரப்பன் மீது மோதியது. இதில், பலத்தகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தாராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.