பொங்கல்: தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாவட்டங்களுக்கு விடுமுறை!
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளத்தின் 6 மாவட்டங்களுக்கு நாளை(ஜன. 14) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் நாளை ஜன.14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் ஜன.15-ஆம் தேதியும், காணும் பொங்கல் ஜன.16-ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது.
இந்தாண்டு, ஜன.17-ஆம் தேதியன்றும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதைத் தவிர வழக்கமான ஜன.18,19 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களும் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க: அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு
சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாட வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகனங்களில் புறப்படத் தொடங்கினர்.
இந்த நிலையில், பொங்கல் திருநாளையொட்டி தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளத்தின் 6 மாவட்டங்களான கொல்லம், திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, வயநாடு, பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு நாளை(ஜன. 14) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.