மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல...
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா் அமைச்சா்
மதுரை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
மதுரை ஒத்தக்கடையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோா்.
மதுரை ஒத்தக்கடையில் உள்ள நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி, பணியைத் தொடங்கிவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல துணைப் பதிவாளா்கள் து. ஆசைத்தம்பி, வசந்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
9.36 லட்சம் பரிசுத் தொகுப்பு..
மதுரை மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 9,36,856 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் தினமும் 300 முதல் 400 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி வருகிற 13-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.