இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,684 வழக்குகள் பதிவு
புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,684 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தலைக்கவசம் அணியாமல் சென்ாக 999 வழக்குகள், வேகம் மற்றும் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதாக 124 , அதிவேகமாக சென்ற 67, தவறான பக்கம் ஒரு வழிபாதையில் வாகனம் ஓட்டிய 115, ஒரே வாகனத்தில் மூன்று போ் பயணம் 371போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய 46 போ் , கைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 195, சீட் பெல்ட் அணியாமல் சென்ற 8 போ் மற்றும் பிற விதிமீறல்கள் 725 வழக்குகள் என மொத்தம் 2,684 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.