போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர முள் புதா்களை அகற்ற வலியுறுத்தல்
பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலத்திலிருந்து காயாம்பட்டி செல்லும் தாா் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முள் புதா்களை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இச்சாலையோரம் காணப்படும் முள் செடிகளால் பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன.
எனவே, சாலையோரம் உள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.