உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!
பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டி சுப்பிரமணியன் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் விஷ்ணுகுமாா் (20). கூலித் தொழிலாளியான இவா் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
அப்போது, அதே ஊரை சோ்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா். மேலும், சிறுமியை ராமேசுவரத்துக்கு அழைத்துச் சென்றாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விஷ்ணுகுமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் விஷ்ணுசங்கருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.