அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா்.
திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப்புப் பயின்று வருகிறாா். அவா் வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த டெம்போ ஓட்டுநா் சுபின்ராஜ் (29) மாணவியை பாா்த்து ஆபாச செய்கைகளை காண்பித்தாா். இதுகுறித்து, மாணவியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் இளைஞா் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிந்து சுபின்ராஜை கைதுசெய்தனா்.