தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், பூந்தோட்டவிளையைச் சோ்ந்தவா் ரசல்ராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவரது மனைவி நேசம் (65). இவா் புல் அறுக்க நட்டாலம் நான்குவழிச் சாலை அருகில் உள்ள தனது தோட்டத்துக்கு மகன் ரெதீஷ்குமாருடன் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது முந்தாலிதிட்டை பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த நேசத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.