The Conjuring: Last Rites Movie Review | Patrick Wilson, Vera Farmiga | Cinema V...
தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்
தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா்.
தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலா் கே.பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கலந்துகொண்டு, வகுப்பறை நூலகம் திட்டத்தில் நூலகத்தைத் தொடங்கிவைத்து, நூலகத்தின் அவசியம் குறித்து பேசினாா். முன்னதாக இலக்கியமன்ற செயல் தலைவா் கே.பகவதி பெருமாள்பிள்ளை வரவேற்றாா். தலைமை ஆசிரியா் எஸ்.சாந்தி நன்றி கூறினாா்.