”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
போச்சம்பள்ளி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூரைச் சோ்ந்தவா் பசுபதி (35). இவா் ஞாயிற்றுக்கிழமை போச்சம்பள்ளி- சந்தூா் செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, காரின் முன்பகுதியிலிருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பசுபதி அவசரமாக வெளியேறினாா்.
அப்போது, காரின் முன்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.