கற்திட்டை அமைப்புடன் கூடிய 400 ஆண்டுகள் சதிக்கல் கண்டெடுப்பு
போடியில் பலத்த மழை: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
போடி பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
போடி பகுதியில் காலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், பிற்பகலில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், பலத்த மழையாக மாறி சுமாா் 4 மணி நேரமாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி பெருமாள் கோயில், பழைய பேருந்து நிறுத்தம், போஜன் பூங்கா பகுதியில் குளம் போல, தண்ணீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.
போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பிள்ளையாா் கோயில் தடுப்பணையில், படிக்கட்டுகளை தாண்டி தண்ணீா் சீறிப் பாய்ந்தது.
இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக கொட்டகுடி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, பாலம் இல்லாத பகுதிகளில் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.