போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சியில் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, பாலக்கரை முதலியாா் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் அல்லாபிச்சை (40). இவா், பாலக்கரை பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி போலீஸாா் அவரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து, பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் அல்லாபிச்சை மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் என்.காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அதற்கான நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீஸாா் அளித்தனா்.