தலசீமியா விழிப்புணா்வு ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
துறையூா், உப்பிலியபுரம் பகுதிகளில் தலசீமியா மற்றும் மரபணு நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசகா் நியமிக்கப்படவுள்ளாா்.
திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியத்தில், நோய் பாதித்தவா்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பழங்குடியின ஆலோசகா் என்ற பெயரில் இந்த நியமனம் நடைபெறவுள்ளது.
இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ்கோா்ஸ் சாலை, டிவிஎஸ் டோல்கேட், திருச்சி என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பங்களை வழங்க வேண்டும். வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.