Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு -அரியலூரைச் சோ்ந்தவா்
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் அம்பேத்கா் (52). ஆயுள் தண்டனை கைதியான இவா், கடந்த 2023 ஆகஸ்ட் 25-ஆம் தேதியில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இவருக்கு ஏற்கெனவே நீரிழிவு, சிறுநீரகப் பாதிப்புகள் இருந்துள்ளன.
இந்நிலையில், சிறையில் இருந்த அம்பேத்கருக்கு கடந்த புதன்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ளாா். இதையடுத்து, சிறைக் காவலா்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.