திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
'போர் முடிவுக்கு வர அமெரிக்கா முக்கியம்...' - வெள்ளை கொடியைப் பறக்க விடும் ஜெலன்ஸ்கி!
கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு படுதோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று பல்வேறு மக்களுக்கு, 'அடுத்து அமெரிக்கா உடனான உக்ரைன் உறவு என்ன ஆகும்?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
நான் உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் அமெரிக்காவில் இருக்கும் அவர்களது சக ஊழியர்களை தொடர்பு கொள்ளுமாறும், அவர்களிடம் இருந்து அலுவல் தகவல்களை பெறுமாறும் கேட்டுள்ளேன்.
உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கு இடையே மரியாதையான பேச்சுவார்தை நடக்க வேண்டும். ஒருவருக்கு மற்றொருவரின் நிலைப்பாடு தெரிய வேண்டும். முக்கியமாக, முழுப்போரில் மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
இது 2022-ம் ஆண்டு அல்ல. நாம் மிக பலமாக இப்போது உள்ளோம். நம்மால் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
ஆனால், இந்தப் போரை நிறுத்த அமெரிக்காவுடனான உறவு மிக முக்கியம். யாருக்குமே முடிவில்லா போர் வேண்டாம். ஐரோப்பாவில் இருக்கும் அனைவரும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை கேட்கிறோம்.
பேச்சுவார்த்தைக்கு பதிலாக வெள்ளை மாளிகையில் நடந்த விஷயத்திற்கு வருந்த மட்டும் தான் முடியும். எப்படி நாம் எப்போதும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து கூட்டாளிகளையும் மதிக்கிறோமோ அப்படி ஒருவர் மீது ஒருவர் அமெரிக்கா மற்றும் உக்ரைன் மரியாதை கொள்ள வேண்டும். அடுத்ததாக அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
உக்ரைன் சம்பந்தமாக ரஷ்யா தங்களது நிலைபாட்டையும், டிமாண்டையும் இன்னும் மாற்றவில்லை என்பது நன்கு தெரியும். ஆனால், உக்ரைனுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்கும் வரை, நம்மை யாராலும் வெற்றி கொள்ள முடியாது" என்று பேசியுள்ளார்.