ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்...
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கனுக்காக விளையாட விரும்பும் முகமது நபி!
தில்லி கேபிடல்ஸ் - 141/10
முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களின் முடிவில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். சாரா பிரைஸ் 23 ரன்களும், அன்னாபெல் சதர்லேண்ட் 19 ரன்களும் எடுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் ரேணுகா சிங் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிம் கார்த் மற்றும் எக்டா பிஸ்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி களமிறங்குகிறது.