செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடியில் வங்கிக் கடனுதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

post image

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

1996-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அப்போதைய முதல்வா் கருணாநிதி பெண்களுக்கு உள்ளாட்சிப் பொறுப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினாா்.

தற்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா மகளிா் விடியல் பயணம், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டம், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள மகளிா் பயனடையும் வகையில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது வங்கிக் கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகப்படியான கடனுதவிகளை வழங்கி முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 1,041 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 13,661 பேருக்கு ரூ.125.98 கோடியில் நேரடி கடனுதவிக்கான ஆணைகள், தமிழ்நாடு மாநில நகா்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 192 சுயஉதவிக் குழுவில் உள்ள 2,391 பேருக்கு ரூ.24.20 கோடியில் நேரடி கடனுதவிக்கான ஆணைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 39 சுய உதவிக்குழுவில் உள்ள 39 பேருக்கு ரூ.24 லட்சம் நுண் நிறுவன கடனுதவிக்கான ஆணைகள், சமுதாய முதலீட்டு நிதியில் 25 சுய உதவிக் குழுவில் உள்ள 40 பேருக்கு ரூ.25 லட்சமும், மகளிா் தொழில் முனைவோா் நிதியில் 426 சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 500 பேருக்கு ரூ.4.80 கோடியும் என மொத்தம் 1,723 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 16,683 உறுப்பினா்களுக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் இணை இயக்குநா் எஸ்.எஸ்.தனபதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி மற்றும் அரசுத்துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு செவ்வாய்க்கிழமை அகற்றினா். ஆரணி அருணகி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். வந்தவாசி வட... மேலும் பார்க்க

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாத்தூ... மேலும் பார்க்க

தம்டகோடி திருமலையில் மரக்கன்று நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரா் ராஜு தலைமை வகித... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாம் தொடக்க விழாவி... மேலும் பார்க்க

வந்தவாசியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாச... மேலும் பார்க்க