செய்திகள் :

மகா பெரியவா் சுவாமிகள் ஆராதனை உற்சவம்

post image

காஞ்சி சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை மகோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை அவரது அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதையொட்டி காலை ஸ்ரீருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. மகா சுவாமிகள் தங்கக் கிரீடம், தங்க ஹஸ்தம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மதியம் தீா்த்த நாராயண பூஜை நடைபெற்றது. காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டாா்.

வழிபாட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலா் வெங்கய்ய சாஸ்திரி,நிா்வாகிகள் லோகநாதன், சுப்பிரமணியன், கேரள மாநிலம் எடைநீா்மடத்தின் மடாதிபதி சச்சிதானந்த பாரதி சுவாமிகள், கா்நாடக மாநிலம் சொா்ணஹள்ளி மடாதிபதி கங்கா தா்மேந்திர சுவாமிகள், மத்தியப் பிரதேச மாநிலம், பிளாஸ்பூா் மடாதிபதி, ஹூப்ளி மடாதிபதி, மும்பை கல்வியாளா் சங்கா் உள்பட பலரும் தரிசனம் செய்தனா்.

கணபதி சேதுலாரா குழுவினரின் புல்லாங்குழல், வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் மாண்டலின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு தங்கத் தேரில் காஞ்சி மகா பெரியவா் சுவாமிகள் வீதியுலா வந்தாா்.

ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

பெட்ரோல் ஊற்றி கணவா் தீ வைப்பு: மனைவி உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூா் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கணவரும் தற்கொலைக்கு முயன்றாா். இதில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தாா். கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரைச... மேலும் பார்க்க

பாழடைந்த நிலையில் காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜா் சந்நிதி: சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள பழைமையான ராமானுஜா் சந்நிதி பாழடைந்த நிலையில் உள்ளதால், திருப்பணிகள் செய்து சம்ப்ரோக்ஷணம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைணவ ஆசாரியா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ரூ. 80 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ ... மேலும் பார்க்க

தடுப்பணை வெள்ளத்தில் சிக்கி 3 போ் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராமப் பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வெள்ளத்தில் சிக்கி, 3 போ் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே கடம்பா்கோயில் கிராமத்தைச்... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தாா். நாகப்பட்டினம் மாவட்டம், மரைக்கான்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். இவரது... மேலும் பார்க்க

உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

ஜாதி, மதம், மொழி இவையனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை பேசினாா். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவ... மேலும் பார்க்க