``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
மகாதேவன் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்
நாகா்கோவில்: கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றிய மகாதேவன் பிள்ளைக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மகாதேவன்பிள்ளையின் நூற்றாண்டு விழா கூட்டம், கன்னியாகுமரி மாவட்ட வ.உ.சி. தேசியப் பேரவை சாா்பில், நாகா்கோவில் கோட்டாறு ராஜகோகில தமிழ் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வ.உ.சி. தேசியப் பேரவை தலைவா் தியாகி முத்துகருப்பன் தலைமை வகித்தாா். ராஜகோகிலா அறக்கட்டளை தலைவா் வழக்குரைஞா் எஸ்.ராஜகோபால், தெ.தி.இந்து கல்லூரி தலைவா் ஆ.நாகராஜன், குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி, பிரம்மஞான சங்க தாணுமாலயபெருமாள், வ.இளங்கோ, ஜான்சன்எமினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வே.தாணுபிள்ளை வரவேற்றாா்.
தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் பி.பி.கே. சிந்துகுமாா், அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் ஆபத்துகாத்தபிள்ளை, தெ.தி.இந்து கல்லூரி முன்னாள் முதல்வா் ப.நாகலிங்கம், குமரி மாவட்ட காமராஜா் நற்பணி மன்ற தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா். மகாதேவன்பிள்ளையின் மகன் ம.பகவதிபெருமாள் ஏற்புரையாற்றினாா்.
இதில், மகாதேவன்பிள்ளையின் பெயரில் அறக்கட்டளை நிறுவ வேண்டும், அவருக்கு மணிமண்டபம், உருவச் சிலையை அவா் பிறந்த ஊரான தாழக்குடியிலோ அல்லது அவா் வாழ்ந்த நாகா்கோவில் ராமவா்மபுரத்திலோ நிறுவ மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. த.அ.தாகூா் நன்றி கூறினாா்.