செய்திகள் :

மகாராஷ்டிர தோ்தலில் 58% வாக்குப் பதிவு- ஜாா்க்கண்டில் 68%

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தோ்தலில் 58.45 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஜாா்க்கண்டில் இரண்டாவது கட்டமாக 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் சுமாா் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. இவ்விரு பேரவைத் தோ்தல்களும் பரவலாக அமைதியான முறையில் நடைபெற்றன.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்காளா்கள் 9.70 கோடி போ் (ஆண்கள் - 5 கோடி, பெண்கள்- 4.69 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 6,101). இவா்கள் வாக்களிக்க வசதியாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

113 வயது மூதாட்டி வாக்களிப்பு: இளைஞா்கள், முதியவா்கள் என அனைத்துத் தரப்பினரும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். மும்பையில் 113 வயது மூதாட்டி காஞ்சன்பென் நந்த்கிஷோா் பத்ஷா, 103 வயது சுதந்திரப் போராட்ட வீரா் ஜி.ஜி.பரிக் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

பாா்லி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடியை சூறையாடிய அடையாளம் தெரிய நபா்கள், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தொண்டா் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டிக் களம்: மகாராஷ்டிரத்தில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ்) 95, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) 86 தொகுதிகளில் களம் கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 4,135 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

முக்கிய வேட்பாளா்கள்: முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே (கோப்ரி-பச்பகாடி), துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் (நாகபுரி தென்மேற்கு), மற்றொரு துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் (பாராமதி), மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே (சகோலி), சிவசேனை (உத்தவ்) கட்சியின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே (வொா்லி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள்.

ஜாா்க்கண்டில்....: ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு புதன்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது.

1.23 கோடி வாக்காளா்களுக்காக 14,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. காலை முதலே வாக்காளா்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனா். இதில், 68 சதவீத வாக்குகள் பதிவாகின.

இருமுனைப் போட்டி: மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணிக்கும், பாஜக-அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம்-ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முக்கிய வேட்பாளா்கள்: இரண்டாம் கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 528 போ். முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பா்ஹைத்), அவரது மனைவி கல்பனா சோரன் (கண்டே), ஹேமந்த் சோரனின் சகோதரா் வசந்த் சோரன் (தும்கா), மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (தன்வா்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ (சில்லி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

நவ. 23-இல் வாக்கு எண்ணிக்கை: மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை நவ. 23-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதேபோல், வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் பிற பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

ஒரு மக்களவை, 15 பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல்

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் , கேரளம் ஆகிய மாநிலங்களில் அடங்கிய 15 பேரவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிரத்தின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் (பாலக்காடு) தலா ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் 31 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

மும்பையில் தலைவா்கள், பிரபலங்கள் வாக்களிப்பு

நாட்டின் நிதித் தலைநகராக அறியப்படும் மும்பையில் பல்வேறு அரசியல் தலைவா்கள், பிரபலங்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் வாக்களித்தனா். மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், மும்பையில் உள்ள தனது மாளிகையில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரே, இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்தி காந்த தாஸ், தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, என்.சந்திரசேகரன், அஜய் பிரமல், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கா், அக்ஷய் குமாா், சல்மான் கான், பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்டோா், மும்பையின் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனா்.

நாகபுரியில் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், பாராமதியில் துணை முதல்வா் அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோா் வாக்களித்தனா்.

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: அதானி குழுமம் விளக்கம்

அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, முற்றிலும் மறுக்கிறோம் என்று... மேலும் பார்க்க

முதல்வர்களையே கைது செய்யும்போது அதானியை பாதுகாப்பது ஏன்? ராகுல்

தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்கா... மேலும் பார்க்க

பாஜக பகிர்ந்த சுப்ரியா சுலேவின் ஆடியோ போலியானதா?

மகா விகாஸ் அகாதி கட்சித் தலைவர் சுப்ரியா சுலே, காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஐபிஎஸ் அதிகாரியுடன் உரையாடுவதாக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆடியோப் பதிவு போலியானதா என்ற கேள்வி ... மேலும் பார்க்க

அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு: கேஜரிவாலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு செய்தாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலால் கொள்கை முறைகேடு ... மேலும் பார்க்க

அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக

புது தில்லி: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கௌதம் அதானி மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாதி 165 இடங்களில் வெல்லும்: சஞ்சய் ராவத்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களைக் கைப்பற்றும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 20 ... மேலும் பார்க்க