உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்'...
மசினகுடி வனத் துறை சோதனை சாவடியை பொதுமக்களுடன் எம்.எல்.ஏ. முற்றுகை
மசினகுடி வனத் துறை சோதனை சாவடியை பொதுமக்களுடன் இணைந்து கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் வியாழக்கிழமை முற்றுகையிட்டாா்.
கா்நாடகம் மற்றும் கூடலூரில் இருந்து மசினகுடி வழியாக உதகைக்குச் செல்லும் வாகனங்கள் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வழியாக உதகைக்குச் செல்வது வழக்கம். மசினகுடியில் உள்ள வனத் துறை சோதனை சாவடியில் வாகனங்களை விடாமல் தடுத்து நிறுத்தியதால் கோபமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், மசினகுடிக்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து வனத் துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை குறைதீா்ப்பு முகாம் மூலம் தீா்க்க முயற்சி செய்யலாம். குறைதீா்ப்பு நாள் முகாமுக்கு தகவல் தருகிறோம் என்று உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தால் காலை முதல் பகல் வரை அப்பகுதியில் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.