கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு! உச்ச...
'மடிக்கணினி விவகாரம்'-தங்கமணி கேள்வி; தங்கம் தென்னரசின் 'கூட்டல் கழித்தல்' கணக்கு... சிரித்த வானதி!
தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது சம்பந்தமாக, அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி, "20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறியிருக்கிறீர்கள். அதற்காக, இந்தப் பட்ஜெட்டில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து கணக்கு போட்டு பார்த்தால் ஒரு மடிக்கணினிக்கு ரூ.10,000 தான் வருகிறது. அது எப்படி தரமானதாக இருக்கும்?" என்று முன்பு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "பட்ஜெட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி என்று சொல்லியிருக்கிறோம். அதற்கு முதற்கட்டமாக, இந்த ஆண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும். இப்போது கணக்கை கூட்டி, கழித்து பார்த்தால் ஒரு மடிக்கணினிக்கு ரூ.20,000 வரும்.

மடிக்கணினியின் தரம் சிறப்பாக இருக்கும். ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தத் தொகை மாறினாலும் மாறும். ஆனால், மாணவர்கள் விரும்பும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களே பொறாமைப்படும் அளவுக்கு மடிக்கணினியின் தரம் இருக்கும்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்தில் இருந்தபோதும் சரி...கழகத்தில் இருந்து விலகி வேறு இயக்கம் கண்டபோதும் சரி... அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள் நாங்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஸ்டாலின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் ஆவார். அவருடைய படம் வெளியாகும்போது, அது குறித்த கருத்துகளை கேட்கும் உரிமையும், அன்பும் கொண்டவர்கள் இருவரும்.
அதேபோல, எங்களோடு நீங்கள் பல காலமாக ஒன்றாக அரசியலில் களமாடி கொண்டிருக்கிறீர்கள். கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், இயக்கப் பற்றோடு இருப்பவர்கள் உங்கள் தொண்டர்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உங்களோடு பயணித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தங்கமணி அண்ணன் நீங்கள் கூட்டல், கழித்தல் கணக்கை இங்கே போட்டு கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுடைய கூட்டல், கழித்தல் கணக்கை எல்லாம் இன்னொருவர் எங்கோ அமர்ந்துகொண்டு போட்டு கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது.
சிலர் எங்கோ அமர்ந்துகொண்டு உங்களுடைய தொண்டர்கள் எதிர்காலம், உங்களுடைய அனுதாபிகளின் எதிர்காலம் ஆகியவற்றை நீர்த்து செய்யப்போவது குறித்து சாணக்கிய தந்திரங்களை போட்டு கொண்டிருக்கிறார்கள்.

தங்கமணி அண்ணனிடம் கேட்டுக்கொள்வது, இந்த மடிக்கணினி விவகார கணக்கில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டதைப்போல, உங்களுடைய மடியில் இருக்கும் கணத்தை பறித்துக்கொள்ள நினைப்பர்வகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் மீது இருக்கும் உரிமை அன்பின் காரணமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இதற்கு வானதி ஶ்ரீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார்கள். அப்படியானால், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பது தான் அர்த்தம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்" என்று பேசியுள்ளார்.