47 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இன்றுமுதல் விமான சேவை!
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்: பிரதமர் மோடி கவலை!
மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கப்ப பகுதியில் அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காக வேண்டுகிறேன். மேலும் நிலநடுக்க பாதிப்புகளைக் கையாள சாத்தியமான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவாகியிருந்தது.
அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால், தாய்லாந்து, மியான்மர் குலுங்கியதாகவும் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் சகாய்ங்க் நகரில் சுமார் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரவியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சகாய்ங்க் பகுதியிலிருந்த பழமையான ஆற்றுப் பாலம் சேதமடைந்திருக்கும் விடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
மியான்மரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை. நிலைமையைச் சமாளிக்கத் தாய்லாந்து அமைச்சரவை அவசரக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம் ரத்தாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது.