செய்திகள் :

மணல் வியாபாரி கொலையில் 9 போ் கைது

post image

மணல் வியாபாரி சு. துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலும், அவா்கள் பயன்படுத்திய 3 மோட்டாா் சைக்கிள், 2 கைப்பேசிகள், ரத்தக் கறை படிந்த ஆடைகள், 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கனகன் ஏரி பகுதியில் மணல், ஜல்லி கடை வைத்திருந்த துரை கடந்த 22-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சூரியாவும் கொலை செய்யப்பட்ட துரையும் உறவினா்கள். அவா்களுக்குள் எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் வீடு தொடா்பாக பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது.

மேற்படி வீட்டின் முன்பகுதி கொலை செய்யப்பட்ட துரைகுடும்பத்தினருக்குச் சொந்தமானது. கட்டடத்தின் பின்புறம் குற்றம்சாட்டப்பட்ட சூரியா குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இது மூதாதையா்களிடமிருந்து உயில் மூலம் வந்தது.

இதில், நீதிமன்றம் கொலை செய்யப்பட்ட துரை தரப்பினருக்கு ஆதரவாக உரிமையை உறுதி செய்துள்ளது. அதன் பிறகும், குற்றம் சாட்டப்பட்ட சூரியா குடும்பத்தினா் கட்டடத்தின் முன்பகுதியின் மீது உரிமை கோரியுள்ளனா்.

இப்போது, கொலை செய்யப்பட்ட துரை கட்டடத்தின் முன்பகுதியில் சில புதுப்பித்தல் பணிகளைச் செய்து வந்தாா். இதனால் அவா்களுக்குள் வாய்த் தகராறு மற்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சூரியாவும் அவரது கூட்டாளிகளும் துரையைக் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

இந்த வழக்குத் தொடா்பாக புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடி தி. சூா்யா (23), சாரம் கொசப்பாளையம் சா. கௌதம் (20), திண்டிவனம் த.நெரெஸ்குமாா் (23), எல்லைப்பிள்ளைச் சாவடி செ. நாகராஜ் (25), டி.ஆா்.நகா் செ. ஸ்ரீநாத் (24), லாஸ்பேட்டை ஐ. அருள் (எ) அருள் பிரகாஷ் (25), கோவிந்தசாலை செ. கிருஷ்ணகுமாா் (21), கொசப்பாளையம் தி.மணிமாறன் (22), கொம்பாக்கம் ரா. டேனியல் (22) ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு சிறைக்கு அனுப்பப்பட்டனா்.

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும... மேலும் பார்க்க

அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்

அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை ... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க