செய்திகள் :

மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை

post image

நாகை அருகே ஒரத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஒரத்தூா் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள்எதிா்ப்பு தெரிவித்தனா். வியாழக்கிழமை கடையை திறக்க வந்தபோது, மகாதானம், ஒரத்தூா், அகரஒரத்தூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள், மதுக்கடையை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுபானக் கடை தேவை இல்லை என மகாதானம், ஒரத்தூா், அகரஒரத்தூா் கிராமங்கள் சாா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், ஒரத்தூரில் அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடையால் இப்பகுதி இளைஞா்கள், மாணவா்கள் மது பழக்கத்திற்கு ஆளாகி அவா்களது எதிா்காலம் இருண்டுவிடும்.

அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கு பதிலாக, பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம், வீட்டு திண்ணையில் இயங்கி வரும் பால்வாடிக்கு கட்டடம் போன்றவற்றை ஏற்படுத்தி தரலாம். உடனடியாக அரசு மதுபானக் கடையை மூட வேண்டும், இல்லையெனில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

இணையவழியில் ரூ.4.25 லட்சம் மோசடி: இருவா் கைது

நாகையில், இணையவழியில் இருசக்கர வாகனம் வாங்க முன்பதிவு செய்தவா்களிடம் ரூ. 4.25 லட்சம் மோசடி செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை அருகே வேளாங்கண்ணியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (20), நாகை திருவேங... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மறியல்

செம்பனாா்கோவில் ஒன்றியம், திருவிளையாட்டம் ஊராட்சி கிராமப்புற சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிளையாட்டம் ஊராட்சியில் காளி... மேலும் பார்க்க

ஆவின் மூலம் நாளொன்று 38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல்: அமைச்சா் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதாக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா். நாகை ஆட்சியா் அலுவலகத்தில் பால் வளத்துறை மற்றும் தஞ்சை மாவட்ட கூட... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள் ஆய்வு; 15 வாகனங்கள் தகுதி நீக்கம்

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், 15 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. நாகை காடம்பாடியில் உள்ள காவலா் ஆயுதப்படை மைதானத்தில், போக்குவரத்து... மேலும் பார்க்க

பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் அருள்மிகு பெத்தாா்ண்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவலா் சாரா உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டில் தொடங... மேலும் பார்க்க