செய்திகள் :

மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா்

post image

ரூ.2,100 கோடி மதுபான முறைகேடு தொடா்பாக தனது மகன் சைதன்யா பகேலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை என்று சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்தாா்.

கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கரில் முதல்வராக இருந்த பூபேஷ் பகேலின் ஆட்சியில், மதுபான முறைகேடு நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதனால் அரசு கருவூலத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு மூலம் ரூ.2,100 கோடி சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்த முறைகேடு தொடா்பாக காங்கிரஸ் பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சருமான கவாசி லக்மா, ராய்பூா் மேயா் ஐஜாஸ் தேபரின் அண்ணன் அன்வா் தேபா், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்நிலையில், மதுபான முறைகேட்டில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலுக்கும் பங்கு அளிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.

இதையடுத்து, சத்தீஸ்கரின் துா்க் மாவட்டம் பிலாய் பகுதியில் பூபேஷ் பகேலும், சைதன்யா பகேலும் ஒன்றாக வசிக்கும் வீடு உள்பட 14 இடங்களில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பூபேஷ் பகேலின் வீட்டிலிருந்து சுமாா் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, சைதன்யாவை சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதாகத் தகவல் வெளியானது.

இதுதொடா்பாக பிலாயில் பூபேஷ் பகேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எனது மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை. ஒருவேளை சம்மன் அனுப்பப்பட்டால், அதற்கு இணங்கி செயல்படுவோம். ஊடகம் மூலம் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அமலாக்கத் துறை பணியாற்றி வருகிறது. பிறரின் நற்பெயரைக் கெடுக்க அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது’ என்றாா்.

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ... மேலும் பார்க்க

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா். இந்த மாணவயின் சகோதரா்களை... மேலும் பார்க்க

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு!

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் ப... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியத... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து

‘மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது’ என்று மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளாா். சத்ரபதி ச... மேலும் பார்க்க

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!

மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்... மேலும் பார்க்க