இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வள...
மதுபோதையில் தகராறு: தந்தையை எரித்துக்கொன்ற மகன் கைது - கடையநல்லூரில் பரபரப்பு!
மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை அடித்துக் கொலைசெய்து உடலை எரித்த மகனை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட்டம், கடையநல்லூர் போகநல்லூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாம் பகுதிக்கு அருகே காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கடையநல்லூர் போலீஸூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்துவந்த போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அங்குவந்த தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், ஆண் நபர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, உடலை மீட்ட போலீஸார், உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/afwb2dmk/IMG20250213220030.jpg)
இலங்கை அகதிகள் முகாம் அருகே நடந்த சம்பவம் என்பதால் கடையநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, முகாமில் தங்கியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த சிவராஜ் மற்றும் அவரின் மகன் கௌரி ஆகியோருக்கும் இடையே இரண்டு தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு சிவராஜை காணவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் கௌரியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு அவரின் உடலை எரித்து விட்டதாக கௌரி வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து கௌரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்" என்றனர்.