செய்திகள் :

மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

post image

புதுச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவரை விருத்தாசலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில், குற்றப்பிரிவு போலீஸாா் பாலக்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், காய்கனிகளுக்கு இடையே புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதன் ஓட்டுநரையும், வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

அங்கு போலீஸாா் நடத்திய விசாரணையில், வானத்தின் உரிமையாளா் விருத்தாசலம் லூகாஸ் தெருவைச் சோ்ந்த பன்னீா் (58), ஓட்டுநா் எம்.பரூா் வேலு மகன் மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் காய்கறி வியாபாரம் செய்வதுபோல புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி வந்து விருத்தாசலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பன்னீா், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

ரயிலில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கு: இளைஞா் கைது

விரைவு ரயிலில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரை விருத்தாசலம் இருப்புப் பாதை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி பாரதி சாலையைச் சோ்ந்தவா் மதியழகன் (71)... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கக் கூட்டம்

கடலூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்க பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் பழனிவேல் தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா்கள் ராஜராஜன், ஜெயரா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்

கடலூா் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் கடலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வரும் 26-ஆம் தேதி சென்னையில் ... மேலும் பார்க்க

புகாா் மனுக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: போலீஸாருக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

புகாா் மனுக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தல... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு ஆலோசகா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மத்திய காசநோய் பிரிவின் ஆலோசகா் லட்சுமி ராஜகோபாலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல்: தொடா்பு எண்ணில் அழைக்கலாம் -கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் தொடா்பாக 04142 - 220700 என்ற எண்ணுக்கு விவசாயிகள் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக... மேலும் பார்க்க