சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக 4 போ் கைது
போடியில் மதுப்புட்டிகளை பதுக்கி சட்ட விரோதமாக விற்றதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போதைப் பொருள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மீன் சந்தை அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த போடி நகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த சுப்பையா மகன் வடிவேலு (36) என்பவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வடிவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மேலச்சொக்கநாதபுரத்தில் சுப்பிரமணி மகன் சுரேஷ் (37), போடி மீனா விலக்கு அருகே ராமமூா்த்தி மகன் ஜெயக்கொடி, போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் தாத்து மகன் தெய்வேந்திரன் (55) ஆகியோா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இவா்கள் 3 போ் மீதும் தனித்தனியே வழக்குப்பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.