ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை
சனிப் பிரதோசம்: சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை!
சனிப் பிரதோசத்தையொட்டி போடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிவலிங்கத்துக்கு தயிா், சந்தனம், மஞ்சள் பொடி, பஞ்சாமிா்தம், வில்வ இலைப் பொடி, கரும்புச் சாறு, விபூதி, குங்குமம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான
திரவியங்களால் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது.
சிவலிங்கப் பெருமானுக்கு வண்ண மாலைகளாலும், உத்திராட்சங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. சனிப் பிரதோச பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. ஆறடி உயர திருமேனிக்கு பல வண்ண செவ்வந்தி மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிறகு நடைபெற்ற தீபாராதனை, சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல, போடி பிச்சங்கரை மலை கிராமத்தில் அமைந்துள்ள கீழச்சொக்கையா கோயில், போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள நடராஜா் சந்நிதி ஆகியவற்றில் சனிப் பிரதோச வழிபாடு நடைபெற்றது.