செய்திகள் :

மத்திய தொழிற்சாலையில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

post image

காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 6 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/2024

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 9

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: Agriculture, Horticulture, Mathematics, Statics, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிக்க |சென்னை ஐஐடி-இல் இளநிலை பொறியாளர் வேலை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cecri.res.in என்ற இணைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து அதனை இணைத்து வரும் 18.12.2024-க்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Administrative Officer, CSIR-Central Electro Chemical Research Institute, Karaikudi-630 003, Tamilnadu

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.12.2024

வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 170 முதுநிலை வாடிக்கையாளர் சேவை அலுவலர் பணியிடங்களுக்கு முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ... மேலும் பார்க்க

வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், எம்டிஎஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோவை வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகு... மேலும் பார்க்க

சுங்க வரித்துறையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சுங்க வரி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்... மேலும் பார்க்க

ரூ.70,890 சம்பளத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வ... மேலும் பார்க்க

கூட்டுறவு நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுற... மேலும் பார்க்க

ரூ.1,40,000 சம்பளத்தில் தேசிய விதைகள் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்... மேலும் பார்க்க