செய்திகள் :

மத்தியப் பிரதேசம்: ``ட-வடிவ பாலம்; வாகனங்கள் எப்படி செல்லும்?'' - எதிர்க்கட்சிகள் காட்டம்

post image

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் 2023-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் 36 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. அதற்குள் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டிருக்கிறது.

பொதுவாக பாலம் 'ட' வடிவில் கட்டப்படாது. குறிப்பாக லாரி. பேருந்து போன்ற பெரிய வாகனகள் 'ட' வடிவிலான இடங்களில் திரும்புவது மிகவும் சிரமம். அதனால், வளைவாகவே கட்டப்படும்.

போபல் பாலம்
போபல் பாலம்

ஆனால், போபாலில் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 90 டிகிரி திருப்பத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. ரூ.18 கோடியில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.

இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங், ``ஒரு பாலம் கட்டப்படும்போதெல்லாம், நிறைய தொழில்நுட்ப பரிசீலனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. தற்போது கட்டப்பட்டிருக்கும் பாலம் தொடர்பாக இருக்கும் குற்றச்சாட்டுகளைப் பரிசீலிப்போம். ஆனால், காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது. அதன் நோக்கம் தவறானது." என்றார்.

இந்த மேம்பாலம், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர், ரயில் நிலையத்தின் நெரிசல் மிகுந்த பகுதிகளை நியூ போபாலுடன் இணைக்கும் திட்டமாக கருதப்பட்டது. ரயில்வே கிராசிங்குகளில் காத்திருப்பதையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் தினமும் சுமார் மூன்று லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்பட்டது.

போபல் பாலம்
போபல் பாலம்

இது தொடர்பாக பொதுப்பணித் துறையின் (பாலத் துறை) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா, ``மெட்ரோ நிலையம் காரணமாக, அந்தப் பகுதியில் நிலம் குறைவாகவே கிடைத்தது. நிலம் இல்லாததால், வேறு வழியில்லாமல் பாலத்தை சுருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மேம்பாலத்தில் இலகுரக வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும். கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது" என்றார்.

போலோ விளையாடியபோது மாரடைப்பு; நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு பின்னர் 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். சஞ்சய் கபூர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இ... மேலும் பார்க்க

Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் இருக்கும். சிலருக்கு ஒரு நபர்மீது, சிலருக்கு புத்தகங்கள் மீது, சிலருக்கு திரைப்படம் மீது, சிலருக்கு அவர்களுக்குரிய பொருள்கள் மீது என எல்லோருக்கும் எதோ ஒன... மேலும் பார்க்க

வலைபாயுதே..!

twitter.com/Chithradevi_91அதிகம் ஆங்கிலம் பேசப்படும் இடங்கள், பாரீன் நாடுகள் மற்றும் டாஸ்மாக் பார்கள்.twitter.com/sasitwittzபெண்கள் ஓட்டும் இருசக்கர வாகனங்களுக்கு பிரேக் ஷூ அவ்வளவு சீக்கிரம் தேய்ந்துப... மேலும் பார்க்க

``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடத்தில் தனது அறையில் ஏர்கண்டி... மேலும் பார்க்க

Chenab Bridge: "தேவையில்லாமல் என்னை பிரபலமாக்காதீர்கள்" - முக்கிய இன்ஜினீயர் மாதவி லதா பதிவு!

ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தைக் கடந்த வெள்ளி அன்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் பேராசிரியர் ஜி மாதவி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; "விசா விதிமுறை மீறில்" - அதிகாரிகள் சொல்வது என்ன?

கபே லேம் கைதுஉலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இ... மேலும் பார்க்க