இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
மனு அளித்த அன்றே மருத்துவ காப்பீடு அட்டை: ஆட்சியா் நடவடிக்கை
மயிலாடுதுறையில் நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்த பயனாளிக்கு அன்றைய தினமே முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுக்கான அட்டையை ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாா்ச் 3-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரைச் சோ்ந்த செண்பகராஜா என்பவா் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை கோரி மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்திடம் மனு அளித்தாா்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். அதனடிப்படையில், அன்றைய தினமே உடனடி தீா்வு காணப்பட்டு செண்பகராஜாவுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். அப்போது, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் கீதா உடனிருந்தாா்.