`மனைவிக்கு பதில் மாடு!'- காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் - இந்தோனேஷியாவில் நட...
மனைவியின் நோய்; கொன்றுவிட்டு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த கணவன்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரக்குளம் ஹைஸ்கூல் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் பாசுராங்கன்(73). இவரது மனைவி ஜெயந்தி(63). இவர்களுக்கு ரஞ்சித் என்ற மகனும், ரசனா என்ற மகளும் உள்ளனர். ரஞ்சித் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், ரசனாவுக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் இருக்கிறார்.
பாசுராங்கன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் ஊருக்கு திரும்பி வந்தவர், திருவனந்தபுரத்தில் மர வேலைகள் செய்து வந்தார். பாசுராங்கனின் மனைவிக்கு சிறுநீரகம் சம்பந்தமான நோய் இருந்து வந்துள்ளது. பாசுராங்கனுக்கு கடன் இருந்துவரும் நிலையிலும் தனியார் மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் எடுத்தார்.
இந்த நிலையில் ஜெயந்தியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து இம்மாதம் தொடக்கத்தில் திருவனந்தபுரம் பட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தினமும் மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து உடன் இருந்து கவனித்து வந்த கணவர் பாசுராங்கன் மன அழுத்தத்தில் காணப்பட்டார். இதற்கிடையே ஜெயந்தியின் உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மனைவியின் சிகிச்சைக்க்காக பணம் புரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது மனைவியை கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். மருத்துவமனை அறையில் இருந்த மின்சார கேபிளை தனது மனைவி ஜெயந்தியின் கழுத்தில் இறுக்கி கொலை செய்தார் பாசுராங்கன். பின்னர் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தார்.

5வது மாடியில் இருந்து குதித்ததில், கீழே விழுந்து படுகாயம் அடைந்த பாசுராங்கனை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்தசம்பவம் குறித்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.