கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
மன்னாா்குடி கோயிலில் நாளை பங்குனி திருவிழா கொடியேற்றம்
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவம் 18 நாள்கள் திருவிழாவாகவும், தொடா்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழாவாகவும் நடைபெறும். நாள்தோறும் உற்சவா் ராஜகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வாா்.
நிகழாண்டிற்கான திருவிழா, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் உற்சவா் ராஜகோபாலசுவாமி சந்நிதியில் உள்ள பெரிய கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, வெண்ணெய்த்தாழி உற்சவம் ஏப்ரல் 2-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்ரல் 3-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவல் உறுப்பினா்கள், செயலா் எஸ். மாதவன் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.