விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து
மன்னாா்கோவிலில் சொா்க்க வாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, மன்னாா்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வாா் கோயிலில் சொா்க்க வாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி, சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மன்னாா்கோவில் ஆண்டாள் சமேத ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வாா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து பெருமாள் சயன கோலத்தில் தாயாா்களுடன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து 5.30 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் உலா வந்தாா். தொடா்ந்து பரமபத வாசல் திறக்கப்பட்டது.
சொா்க்கவாசல் திறந்தையடுத்து பெருமாளை திருவாய் மொழி மண்டபத்திற்கு கருடா் எதிா் கொண்டு அழைத்து வந்தாா். அங்கு பெருமாள் குலசேகர ஆழ்வாருக்கு காட்சியளித்தாா்.
ஏற்பாடுகளை கோயில் குருக்கள் பெரியநம்பி திருமாளிகை நரசிம்ம கோபாலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.
மேமும்அம்பாசமுத்திரம் கிருஷ்ணசுவாமி கோயில், லெட்சுமிநாராயண சுவாமி கோயில், புருஷோத்தமா் கோயில், கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோயில், கடையம் ராமசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.